சிவப்பு செம்பருத்தி செடி(Red Hibiscus Plant) ஒரு புதர்(shrub) வகை தாவரமாகும். இந்த ஆண்டு முழுவதும் பூத்து குலுங்கும் தாவரத்தின் தாயகம் ஆசியாவின் வெப்ப மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள். மருத்துவ குணங்கள் நிறைந்த சைனா ரோஸ் நான்கு முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூக்கள் ஐந்து இதழ்களையும் நான்கு முதல் பதினெட்டு செ.மீ. வரை பரந்திருக்கும்.
ரோஸ் மல்லோ(Rose Mallow) வின் கண்ணை கவரும் மலர்களுக்கு பட்டாம்பூச்சிகளையும் மற்றும் தேன் சிட்டுகளையும் கவர்ந்திழுக்கும் தன்மை உண்டு. வெயிலை தாங்கி திறந்த வெளியில் குறைந்த பராமரிப்பில் வளர்வதுதான் செம்பரத்தையின் சிறப்பு.
- பொது பெயர்கள் – சிவப்பு செம்பருத்தி, சென்பருத்தி, சிவப்பு ஒற்றை அடுக்கு செம்பருத்தி(Hibiscus Red Single Layer), சிகப்பு செம்பரத்தை, ரோஸ் மல்லோ, சைனா ரோஸ், மற்றும் ஷூ பிளாக்பிளாண்ட்
- அறிவியல் பெயர் – செம்பருத்தி ரோசா-சினென்சிஸ்(Hibiscus rosa-sinensis)
- குடும்பம் – மால்வேசி(Malvaceae)
- பூர்விகம் – ஆசியாவின் வெப்ப மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள்
- உயரம் – செம்பருத்தி செடி 4 முதல் 5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
செம்பருத்தியின் பயன்கள்:
அழகியல் பயன்கள்: இது வீட்டின் வெளிபுற தோட்டம்(Outdoor Garden), வெயில் படும் வீட்டின் முன்பக்கம்(Balcony & Portico) மற்றும் மாடி தோட்டம்(Terrace Garden) போன்றவற்றின் அழகினை மெருகூட்ட பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள்: பராம்பரிய மருத்துவத்தில்(Traditional Medicine) செம்பருத்தியின் வேர், பூக்கள், இலைகள் மற்றும் விதைகள் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக, மாதவிடாய், சிறுநீரகம், தலை சுழற்றல், உட்சூடு, இருமல், சுரம், கபால வறட்சி, கண்ணெரிச்சல் மற்றம் தீராத தாகம் தொடர்பான உடல் கோளாறுகளை சரி செய்வதில் செம்பரத்தை முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர் என்.கே. சண்முகம் எழுதிய மூலிகை களஞ்சியம்(Dictionary of Medical Plants) என்ற நூலில் கூறபட்டுள்ளது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் குறிப்பு நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான பொருட்கள் அமைப்பாலும் காலநிலையாலும் வேறுபடலாம். இந்த பொருளை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் திரும்பப் பெறமாட்டாது.
Delivery Partners: ST Courier, Professional Courier, India Speed Post, DTDC Courier and Mettur Transports(MSS).
Reviews
There are no reviews yet.