துரியன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் | Durian Fruit Health Benefits in Tamil

‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் துரியன் பழத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முள்நாறி என்றாலே அதன் வாசனை தான் முதலில் நினைவிற்கு வரும் அந்த அளவிற்கு பெயர் பெற்றது.

Durian Fruit
துரியன் பழம்/Pixabay

துரியான் பழம் சிறு குறிப்பு

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களைப் போன்று துரியான்(இலங்கை வழக்கு) பழமும் தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. மழைக்கால பழமான டுரியானின் வெளி அமைப்பு முட்கள் நிறைந்து பச்சை மற்றும் பழுப்பு நிறத்திலும் உள் அமைப்பு மஞ்சள்(அரிதாக இளஞ்சிவப்பு மற்றும் நீலம்) நிறத்திலும் இருக்கும்.

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் விளைவதாலும், விரும்பி உண்ணபடுவதாலும், அந்நாட்டு மக்கள் துரியன் பழத்தை ‘பழங்களின் அரசன்’ என்று அழைக்கின்றனர்.

மேலும் துரியன் பழம் 30க்கும் மேற்பட்ட வகைகளில் கிடைத்தாலும் 9 வகைகளே உட்கொள்ள உகந்தவை. ஒரு பழம் 1 அடி நீளத்திலும் 1/2 அடி அகலத்திலும் 1 முதல் 3 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.

‘டுரி’ என்றால் மலாய் மொழியில் முள் என்று பொருள்படுவதன் காரணமாக கூட இப்பழத்திற்கு டுரியன்(Durian) என்று பெயர் வந்திருக்கலாம் என்று நம்படுகிறது.

அறிவியல் பெயர் : துரியோ ஜிபெத்தினஸ்(Durio zibethinus)

குடும்பம் : மால்வேசியே(Malvaceae)

துரியன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு

243 கிராம் அளவுள்ள ஒரு கிண்ணம் துரியன் பழத்தின் சுளைகள் வழங்குபவை

ஆற்றல்357 கிலோகலோரி
கார்போஹைட்ரேட்66 கிராம்
புரதம்04 கிராம்
கொலஸ்ட்ரால்13 மி.கி
நார்ச்சத்து9 கிராம்
வைட்டமின்கள்
வைட்டமின் சி80% தினசரி மதிப்பு
வைட்டமின் B9 (ஃபோலேட்)22% தினசரி மதிப்பு
வைட்டமின் பி1 (தியாமின்)61% தினசரி மதிப்பு
வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்)29% தினசரி மதிப்பு
வைட்டமின் B3
(நியாச்சின்)
13% தினசரி மதிப்பு
வைட்டமின் B3
(பைரிடாக்சின்)
38% தினசரி மதிப்பு
கனிமங்கள்
மாங்கனீசு39% தினசரி மதிப்பு
தாமிரம்25% தினசரி மதிப்பு
மக்னீஷியம்18% தினசரி மதிப்பு
பொட்டாசியம்30% தினசரி மதிப்பு

துரியன் பழத்தின் நன்மைகள் | Durian Fruit Benefits in Tamil

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

துரியன் பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை ஊக்குவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை(Free Radicals) – ஐ நடுநிலையாக்கும் தன்மைக் கொண்டவை. மேலும் இப்பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறு மார்பக புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தடுக்கின்றன என்று ஒரு சோதனைக் குழாய் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர.

உடல் எடையை அதிகரிக்க உதவும்

டுரியான் பழம் கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புச் சத்து மற்றும் ஆற்றலின் சிறந்த ஆதாரமாக உள்ளது. 100 கிராம் அளவுள்ள துரியன் பழத்தை உண்டால் 147 கிலோகலோரி வரை ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த அளவு மற்ற வெப்பமண்டல பழங்களில் கிடைப்பதை விட மிக அதிகமான ஒன்றாகும். இதனால், உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் உண்ண வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது துரியன்.

மேலும் படிக்க: மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

இதய நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

துரியன் பழத்தில் காணப்படும் பல சேர்மங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தையும் அல்லது தமனிகளின் கடினத்தன்மையையும் குறைக்கவும் உதவுகின்றன.

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

பழத்தின் தோலில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஈஸ்ட் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவைக் குறைக்கும்

குறைந்த கிளை செமிக் குறியீட்டை (ஜிஐ) கொண்டுள்ள பழங்களில் ஒன்றான துரியன் பொட்டசியம் மற்றும் மாங்கனீசு சத்துகளின் ஆதாரமாகவும் உள்ளது. குறைந்த கிளை செமிக் குறியீட்டு பட்டியலில் உள்ள உணவுகள் மற்றும் பொட்டசியம் இரத்த அழுத்தத்தையும், நீரிழிவு நோய் ஏற்படுவதைக் குறைக்கும் தன்மைக் கொண்டவை. மேலும் மாங்கனீசு சத்து இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும்.

Durian Fruit/Getty Images

உட்கொள்ளும் முறை மற்றும் முன்னெச்சரிக்கைகள்

முட்களைக் கொண்டுள்ள டுரியான் பழத்தினை கையுறை அணிந்து கத்தியைக் கொண்டு நறுக்கி உள்ளே உள்ள சுளைகளை உட்கொள்ள வேண்டும். விதை மற்றும் தோலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

இப்பழத்தை மிதமான அளவில் சீரான இடைவேளி விட்டு உட்கொள்ளுதலும் பின்பு அதிகம் தண்ணீர் குடிப்பதும் மிகவும் நல்லது. சிலருக்கு வயிற்று உபாதைகள் மற்றும் ஒவ்வாமை போன்ற கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும்.

மதுவையும் துரியன் பழத்தையும் ஒருங்கே உண்பது கேடு விளைவிக்கும். சிறுநீரக பிரச்சனை, கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இப்பழத்தினை உட்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

துரியன் மரத்தை வளர்க்கும் முறை

டுரியான் மரம் 40 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
மேலும், துரியன் 5.0-6.5 pH மதிப்புடன் ஆழமான, நன்கு வடிகட்டிய மண்ணை விரும்புகிறது. இது சரிவுகளிலும் மலையடிவாரங்களிலும் நன்றாக வளரும்.

இம்மரம் வெப்பமண்டலத்தை பூர்வீகமாகக் கொண்டிருப்பதால், அது வளர 24-32°C வெப்பநிலை மற்றும் 75-80% ஈரப்பதம் தேவைப்படுகிறது. தினசரி வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்-க்கு கீழே குறையும் போது அது வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.

குறிப்பு: காய் காய்த்து இருக்கும் மரத்தின் கீழ் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Durian Fruit Plant

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது என்று மருத்துவ மறுப்பு அறிவிக்கிறது.