மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் | Mangosteen Fruits Health Benefits in Tamil

மிகவும் பிரபலமாகாத பழங்களின் பட்டியலில் இருந்து வந்த நிலையில், மங்குஸ்தான் பழம் தற்போது அனைவரும் விரும்பி வாங்கி உட்கொள்ளும் பழங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகளாக தான் இருக்க கூடும். இப்போது அந்த ஆரோக்கிய நன்மைகள் என்ன என்றுதான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கபோறோம்.

மங்குஸ்தான்
Mangosteen Fruit/Getty Images

மங்குஸ்தான் பழம் சிறு குறிப்பு

தென்கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்ட மங்குசுத்தான் இன்று மேற்கத்திய உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஊதா(Purple) வண்ணத்தில் இருக்கும் இந்த பழம் இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு அந்த நாட்டு மக்களால் அதிகளவில் நுகரப்படுகிறது.

குறைந்த இனிப்பு சுவையும் அதிக புளிப்பு சுவையும் கலந்த மங்குஸ்தான் பழத்தின் உட்பகுதி சுளை போன்ற அமைப்பில் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அறிவியல் பெயர் : கார்சீனியா மாங்கோஸ்தானா(Garcinia mangostana)

குடும்பம் : க்ளூசியாசியே(Clusiaceae)

மங்குசுத்தான் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு

196 கிராம் அளவுள்ள ஒரு கிண்ணம் வடிகட்டிய மங்குஸ்தான் பழரசம் வழங்குவது

ஆற்றல்143 கிலோகலோரி
கார்போஹைட்ரேட்35 கிராம்
புரதம்01 கிராம்
கொலஸ்ட்ரால்01 மி.கி
நார்ச்சத்து3.5 கிராம்
வைட்டமின்கள்
வைட்டமின் சி6% தினசரி மதிப்பு
வைட்டமின் B9 (ஃபோலேட்)15% தினசரி மதிப்பு
வைட்டமின் பி1 (தியாமின்)9% தினசரி மதிப்பு
வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்)8% தினசரி மதிப்பு
கனிமங்கள்
மாங்கனீசு9% தினசரி மதிப்பு
தாமிரம்15% தினசரி மதிப்பு
மக்னீஷியம்6% தினசரி மதிப்பு

மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் | Mangosteen Fruit Benefits in Tamil

உடல் எடையை குறைக்க உதவுகிறது

பழங்களின் இராணி என்றழைக்கப்படும் மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் நார்ச்சத்து உடல் எடை குறைப்பில் மிகவும் முக்கிய பங்கு வகின்றது.

பொதுவாக நார்ச்சத்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீரக்கவும் உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த மங்குசுத்தான் பழத்தை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் போன்ற குடல் தொடர்பான பிரச்சனைகளும் இருக்காது உடல் எடையும் சீராக இருக்கும்.

Mangustan Fruit
Mangustan Fruit/Getty Images

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும்

மங்குஸ்தான் பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்துகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டமைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகின்றன.

நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவியும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ள வைட்டமின் சி பல்வேறு நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாடுகளில் பங்கேற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்

இந்த உருண்டை வடிவ பழத்தில் காணப்படும் சாந்தோன் கலவைகள் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக சோதனை குழாய் மற்றும் விலங்கு கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மங்குஸ்தானில் காணப்படும் நார்ச்சத்தும் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அவ்வப்போது இப்பழத்தை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் உண்டுவருவது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க: ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கியமான சர்மத்தை பராமரிக்க உதவும்

இப்பழத்தின் சாற்றில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சூரிய ஒளியல் தோல் சேதம் அடைவதனால் ஏற்பட கூடிய தோல் புற்று நோய் மற்றும் வயது முதிர்ச்சி அறிகுறி போன்றவற்றை தடுப்பதாக மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் வெயில் நேரத்தில் வெளியில் அதிகம் செல்பவர்களும், என்றும் இளமையை விரும்புவர்களும் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது மங்குஸ்தான் என தெரிய வருகிறது.

மங்குசுத்தான் பழத்தின் மேலும் சில நன்மைகள்

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் நார்ச்சத்து, சாந்தோன் கலவைகள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

உட்கொள்ளும் முறை மற்றும் முன்னெச்சரிக்கைகள்

மங்குஸ்தான் பழத்தின் ஊதா நிறத் தோலினை கத்தியைக் கொண்டு நீக்கிவிட்டு உட்புற வெள்ளைப் பகுதியை அப்படியே உட்கொள்வது மிகவும் நன்மை தரும். குறிப்பு: தோல் மற்றும் விதையை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இப்பழத்தைக் கொண்டு பழச்சாறு, சுமுத்தி மற்றும் சாலட் செய்தும் சாப்பிடலாம்.

முன்னெச்சரிக்கை என்று பார்த்தால் இப்பழத்தில் காணப்படும் சாந்தோன் கலவைகள் இரத்தம் உறைதலை மெதுவாக்க கூடியவை. கர்பிணி பெண்கள் மற்றும் பாலும் தாய்மார்கள் மருவத்துவரின் ஆலோசனைக்கு பின் மங்குசுத்தான் பழத்தை உட்கொள்ள வேண்டும்.

மங்குஸ்தான் மரத்தை வளர்க்கும் முறை

இப்பழத்தின் மரம் 7 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது என்பதால் 40°C கீழ் வெப்பநிலை நிலவும் நிலப்பகுதியில் நடவுச் செய்து வளர்ப்பது பயனளிக்கும். மரத்திற்கு அவ்வப்போது தேவையான ஊட்டச்சத்து அளிப்பது மிகவும் அவசியம்.

உங்களுக்கு மங்குஸ்தான் மரக்கன்று தேவைப்பட்டால் அதை நமது வலைதளத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். உயர்தரமான கன்று ஒன்றின் விலை 449 ரூபாய் மட்டும்.

Mangosteen Plant for Sale

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது என்று மருத்துவ மறுப்பு அறிவிக்கிறது.