கண்ணை கவரும் வண்ணம் நாவுரும் சுவை இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் இன்று பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக மாறிவருகிறது ரம்புட்டான்(Rambutan) எனபடும் இறம்புட்டான் பழம்.
இந்த சிறிய வகை பழத்தின் மருத்துவ நன்மைகள் மற்றும் அதன் மரக்கன்றை வாங்கி வளர்க்கும் முறை பற்றிதான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.
ரம்புட்டான் பழம் ஒரு சிறு குறிப்பு
தென்கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்ட ரம்புட்டான் பழம், சிவப்பு, மஞ்சள் மற்றும் வெளிர் பச்சை நிறங்கள் இருக்கும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்படும் இப்பழத்தின் உடலமைப்பை தோல், சதை மற்றும் விதை என மூன்று பாகங்களாக பிரிக்கலாம்.
திக்திக்கும் இனிப்புச் சுவை கொண்ட இப்பழத்தின் மேற்பகுதி முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.
அறிவியல் பெயர் : நெஃபெலியம் லாப்பாசியம்(Nephelium lappaceum)
குடும்பம் : சபிண்டேசியே(Sapindaceae)
ரம்புட்டானின் ஊட்டச்சத்து மதிப்பு
பல்வேறு வைட்டமின் சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது இறம்புட்டான். குறிப்பாக உணவுகள் மூலமே கிடைக்கும் வைட்டமின் பி5(பேண்டோதெனிக் அமிலம்) இப்பழத்தில் காணப்படுகிறது.
மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், ஃபோலேட், மற்றும் கோலின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளன.
100 கிராம் அளவுள்ள ரம்புட்டான் பழத்தின் சதைப்பகுதியை உட்கொள்வதால் கிடைப்பவை.
ஆற்றல் | 75 கிலோகலோரி |
கார்போஹைட்ரேட் | 16.02 கிராம் |
புரதம் | 0.46 கிராம் |
கொலஸ்ட்ரால் | 0 மி.கி |
நார்ச்சத்து | 0.24 கிராம் |
வைட்டமின் | |
வைட்டமின் சி | 30 மி.கி |
கனிமம் | |
கால்சியம் | 10.6 மி.கி |
பாஸ்பரஸ் | 31 மி.கி |
ரம்புட்டான் பழத்தின் நன்மைகள் | Rambutan Benefits in Tamil
ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்
ரம்புட்டான் பழத்தில் காணப்படும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகைச் செய்கின்றது.
இப்பழத்தின் சதைப்பகுதியில் காணப்படும் பாதி கரையாத நார்ச்சத்து பெருமளவில் மலத்தில் சேர்வது மட்டுமல்லாமல் குடல் போக்குவரத்தையும் விரைவுபடுத்த உதவுகிறது . இதன் காரணமாக மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதும் குறைக்கப்படுகின்றன.
மேலும், பாதி கரையும் நார்ச்சத்து குடலில் நன்மைச் செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவு வழங்கும் பணிகளைச் செய்கின்றன. இதனால் அந்த பாக்டீரியாக்கள் அசிடேட், புரோபியோனேட் மற்றும் ப்யூட்ரேட் போன்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்கி அவை மூலம் குடலில் உள்ள செல்களுக்கு உணவளிக்க செய்கின்றன.
இந்த குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை(inflammation) குறைக்கலாம். அதே நேரத்தில் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome), கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி உள்ளிட்ட குடல் கோளாறுகளின் அறிகுறிகளையும் மேம்படுத்தலாம்.
உடல் எடையைக் குறைக்க உதவும்
100 கிராம் எடையுள்ள ரம்புட்டான் பழத்தின் சதைப்பகுதியை உட்கொள்ளும் போது 75 கிலோகலோரி ஆற்றலும் 1.3 முதல் 2 கிராம் நார்ச்சத்தும் கிடைக்கும். ஆற்றலின் அளவை விட நார்ச்சத்தின் அளவு குறைவு என்பதால் இப்பழத்தினை உட்கொண்டுவிட்டால அதிக நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. இதன் காரணமாக உணவு நுகர்வு குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்
இறம்புட்டான் பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே ரம்புட்டான் பழத்தை உணவில் சேர்த்து வருவது தொற்று நோய் தாக்குதலை எதிர்த்து போராட உதவும்.
மேலும் சில நன்மைகள்
குறிப்பாக ரம்புட்டான் பழத்தில் காணப்படும் கலவைகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம் என்றும் இப்பழத்தின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாறு இதய மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
உட்கொள்ளும் முறை மற்றும் முன்னெச்சரிக்கை
தோல் மற்றும் விதைப் பகுதிகள் கசப்புத் தன்மைக் கொண்டதால் அவற்றைத் தவிர்த்து விட்டு நடுவில் உள்ள சதைப் பகுதியை மட்டும் உண்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இரம்புட்டான் பழத்தைக் கொண்டு ஐஸ்கிரீம், ஜூஸ், சுமுத்தி மற்றும் ஜாம் போன்றவை செய்து சாப்பிடலாம்.
கர்பிணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், தாங்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.
ரம்புட்டான் மரத்தை வளர்க்கும் முறை
ரம்புத்தான் பழத்தின் மரம் குறைந்தது 15 லிருந்து 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது என்பதால், மிதமான வெப்பநிலை நிலவும் நிலப்பகுதியிலே நடவுச் செய்து வளர்ப்பது பயனளிக்கும்.
நீங்கள் ரம்புட்டான் மரத்தை உங்கள் வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டால், அதற்காக தேடி எங்கும் அலைய வேண்டாம். மரக்கன்றை நமது வலைதளத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். 1.5 லிருந்து 2 அடி உயரமுள்ள ரம்புட்டான் மரக்கன்றின் விலை 239 ரூபாய் மட்டும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது என்று மருத்துவ மறுப்பு அறிவிக்கிறது.